பளையில் வெடி பொருட்கள் மீட்பு!


பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்ட போது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர். 

உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிபடையினர் தோண்டப்பட்ட குழியினுள் இருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டெடுத்துள்ளனர். 

இதில் 02 கைக்குண்டுகள் மற்றும் 175 தோட்டா ரவைகள் 01 மகசின் என்பன மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வெடிப்பொருட்கள் யுத்த காலத்தில் பயன்படுத்தியது எனவும் அவை செயலிழந்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments