கடல் விற்பனை:டக்ளஸிற்கு ஆப்பு!

 


இலங்கையின் வடபுல கடலில் இந்திய மீனவர்களிற்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கு அனுமதிக்கும் இலங்கை அரசின் முயற்சி அரச அமைச்சரிற்கு எதிராக உள்ளுர் மீனவர்களை திரளச்செய்துள்ளது.

இதனிடையே அரச கடற்றொழில் அமைச்சரிற்கு எதிராக உள்ளுர் மீனவர்கள் எதிர்ப்பு குரல்களை எழுப்பியுள்ளதுடன் பகிரங்க போராட்ட அறிவிப்பினையும் விடுத்துள்ளனர்.அத்;துடன் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய மீனவர்களது அத்துமீறலிற்கு எதிராக அணிதிரள அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக,  கடற்றொழிலாளர்களினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன் ஆகிய வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையிலும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா,  இச்செயற்பாடு தன்னுடைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments