அச்சுவேலியில் வாள் வெட்டு - இருவர் கைது!


யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இரு  குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவிலடியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார், குட்டியப்புலம் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய  இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலும் சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

No comments