பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும்


பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாண் ஒன்றின் விலை 150, 160, 170 எனவும் சில பிரதேசங்களில் 180 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை 100% குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆகவே குறைந்தபட்சம் பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன கூறியுள்ளார்.

No comments