இந்தியாவால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட போராளி!
இந்திய சிறைகளில் கடந்த 5வருடங்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான செல்லப்பாக்கியம் சுதாகரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வசித்து வந்த சுதாகரன், 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு, திருச்சியில் உள்ள இலங்கையர்களுக்கான அகதிகள் சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்கள் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், பெப்ரவரி 25ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் இலங்கை திரும்பிய நிலையில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே தனது சகோதரன் 4ஆவது மாடி என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அவரது மூத்த சகோதரர் செல்லப்பாக்கியம் உலகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் இரகசிய விசாரணையாளரால் விசாரிக்கப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை எனவும் சகோதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
Post a Comment