அமெரிக்கா மீண்டும் உரம் வழங்குகின்றது!

 


சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி USAID மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு,விவசாய அமைப்பும்  வழங்கிய 36 ஆயிரம் மெற்றிக்தொன் டி.எஸ்.பி சுப்பர் பொஸ்பேட் உரம் இன்று மாலை விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த உரமானது நெல் விவசாயிகளின் பயிர்களுக்கு   அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கும்.

விவசாய திணைக்களத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதத்தில், ஒரு ஹெக்டேயாருக்கு 55 கிலோ கிராம் டிஎஸ்பி உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் என 11 ஆயிரத்து 537 மெற்றிக்தொன் உரம் விநியோகம் செய்யப்படும்.

மன்னாருக்கு - 1244 மெற்றிக்தொன், வவுனியாவுக்கு- 821 மெற்றிக்தொன், கிளிநொச்சிக்கு- 820 மெற்றிக்தொன், முல்லைத்தீவுக்கு 694 மெற்றிக்தொன், யாழ்ப்பாணத்திற்கு- 297 மெற்றிக்தொன் உரமும் வழங்கப்படும்

No comments