யாழ்ப்பாணத்தில் தேர்தல் வேண்டும்!



தேர்தலை நடாத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர்; யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை கட்சி ஆதரவாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி தேர்தலை உடன் உடன் நடத்து, வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே, உழைக்கும் மக்களை சுரண்டாதே என பல்வேறு கோசங்களை போராட்டத்தின் போது எழுப்பினர்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, காவல் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் எனவும் நிமல் புஞ்சிஹேவ குறிப்பிட்டுள்ளார்.


No comments