மகன் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்ற தாய் உயிரிழப்பு - கிளிநொச்சியில் சோகம்!
மகன் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்ற தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த இராசரட்ணம் கனகராஜா (வயது 43) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியினை கேள்வியுற்ற தாயார் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தாய் மற்றும் மகனின் இறுதி கிரியைகள் அவர்களின் சொந்த இடமான கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.
Post a Comment