அசைய மறுக்கும் விசயகலா!



முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தம் காரணமாக தமிழ் அரசியல் கைதி ஒருவரின் விடுதலை தெடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய தீர்மானம் எடுக்க முடியாத நிலைக்கு இருப்பதாக அரச உயர் மட்டங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

 சம்பவம் தொடர்பில் தெரிய வருவது முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரன் கடந்த 2008 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்போது, மகேஸ்வரனின் பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொலையாளி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது அரசியல் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொலை முயற்சியில் தொடர்புடையவரையும், மகேஸ்வரன் கொலை குற்றவாளியையும், பாதிக்கப்பட்டவர்களின் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டங்கள்  மூலம் அறிய கிடைத்தது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஏற்கனவே தனது ஆட்சேபமின்மையை அறிவித்துள்ள போதிலும், குறித்த கொலை குற்றவாளி விடுதலை செய்யப்படக் கூடாது என்பதில் விஜயகலா மகேஸ்வரன் இறுக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் தரப்புகளே தடையை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களும் விடுதலை தாமதமாக கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments