இணைந்தனர் சாணக்கியனும் கருணாவும்!இரா.சாணக்கியன் மற்றும்   கோவிந்தன் கருணாகரம் உட்பட பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பின் பின்னராக  இருவரும்  இணைந்து சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர்.

மேற்படி சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானம் அவர்களும் கலந்து கொண்டார்.

திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் என்னால் சில விடயங்கள் முன் வைக்கப்பட்டது அதில் சமகால அரசியல் தொடர்பான விடயங்கள், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான விடயங்கள் போன்றன கலந்துரையாடப்பட்டன. மேலும் இந்தச் சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் மூலம் எவ்வாறு அரசியலை நகர்த்தலாம் என்ற விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் எடுத்துக்கூறப்பட்டது.

No comments