காசு கிடைத்தால் உடனேயே தேர்தலாம்!நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவது பற்றி ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments