அடுத்து நீர்வேளாண்மை உற்பத்தி?



 வடக்கு மாகாணத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளை சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு தென்னிலங்கைக்கு கையளிக்கும் புதிய தரகர் வேலைக்கு டக்ளஸ் களமிறங்கியுள்ளார்.

அப்பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் விசேட கள ஆய்வுகள் கடந்த சில நாட்களாக நாரா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த கள ஆய்வுகளை வெற்றிகரமாக இன்று நிறைவு செய்த நாரா குழுவினரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களின் ஒத்துழைப்பிற்கான வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தியதாக கட்சி அறிவித்துள்ளது.

பூநகரியின் பரமன்கிராய் மற்றும் குடமுரூட்டியென பல பகுதிகள் தென்னிலங்கையினை சேர்ந்தவர்களிற்கு இறால் பண்ணை அமைப்பிற்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments