யாழ்ப்பாணத்திற்கு விடிவில்லை!



யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையப் பாதையை விஸ்தரிக்க இந்திய அரசு பல மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகின்றது.ஆனாலும் இலங்கை அரசு விமான நிலையத்தை விஸ்தரிப்பதில் எவ்வளவு அக்கறையுடன் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையம் தற்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுவிட்ட போதும் ஓடுபாதை வசதியின்மை  காரணமாக சிறிய விமானங்களே தரையிறங்கிவருகின்றன.

இந்நிலையில் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்துவழங்க இந்தியா உதவிகளை வழங்குவதாக கூறுகின்ற போதும் அதனை இலங்கை அரசு பொருட்படுத்தாது இருந்து வருகின்றது.

இதனிடையே தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்தான காங்கேசன்துறைக்கான கப்பல் சேவையினை இந்திய அரசே ஏற்படுத்தி சித்திரை முதல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 

எனினும் தற்போது  அதிகரித்த கட்டணத்தில் வாரத்தில் சில நாட்களிற்கு மட்டும் விமான சேவையினையும் இந்திய விமான சேவை நிலையங்களே வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments