தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை


அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத்வத்தேச நாணய நிதியத்தின் உதவியும் விரைவில் கிடைக்கவுள்ள நிலையில் நெருக்கடியில் இருந்து வெளியேற நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரின் நலனுக்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துவரும் போது மக்களின் வாழ்க்கை, மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க அனுமதிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரச சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல, அத்தியாவசிய சேவைகளாக இவற்றை பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளான போக்குவரத்து, துறைமுகங்கள், போக்குவரத்து, தபால், மின்சார சேவைகளை வழங்க தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments