டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.
இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment