தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !


09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுனில் ஹந்துன்நெத்தி, நிஹால் அபேசிங்க ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட 35 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments