காடு இல்லை:தமிழ் மக்களின் காணி!வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு நிகழ்வுக்கு வந்த காணி உரிமையாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு  இராணுவத்தினர் தென்னங்கன்றுகள் வழங்கிவைத்தனர்.

பலாலியிலிருந்த தென்னை,பனைகளை அழித்த படையினர் நல்லாட்சியென தற்போது தென்னங்கன்றுகளை வழங்கியுள்ளனர்.

இதனிடையே பலாலி வடக்கு அன்ரனிபுரத்தில் 13 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. இது அரச காணியாகும் பருத்தித்துறையில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களை இங்கு குடியேற்றப்படவுள்ளனர்.

இந்த காணிக்கு அருகில் உள்ள தனியார் காணிகள் இன்றைய தினம் விடுவிக்கப்படவில்லை தொடர்ந்தும் முட்கம்பி வேலிக்குள் உள்ளது.  வேலிக்குள் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயமும் உள்ளது.  காணிகள் எதுவும் இனங்காண முடியாது இப்பிலிப்பிலி மரங்கள் வளர்ந்து பற்றை காடுகளாக உள்ளது. இங்கு தங்கள் காணி விடுவிக்கப்படாதது ஏமாற்றமடைந்தனர். கண்ணகி அம்மன் ஆலய காணி விடுவிப்பையடுத்து கற்பூரம் கொளுத்தினர்.

No comments