தியாக தீபத்தின் ஆசியுடன் திருமணம் ; மணமக்களுக்கு குவியும் பாராட்டுக்கள்!யாழ்ப்பாணம் நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக தாலி கட்டி திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்ட தம்பதிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியரான விவேகானந்தா தமிழீசன் மற்றும் போசிந்தா தம்பதியே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் பலர்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். No comments