காணி விடுவிப்பு:பிடுங்கி செல்லப்பட்ட மின்கம்பங்கள்வலிகாமம் வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட பகுதியில் கீரிமலையில் (J/226) உள்ள கடற்படையின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை அமைத்தமையால் அகன்ற கார்ப்பெட் வீதியும் மின்விளக்கு கம்பங்களும் பொருத்தப்பட்டன. என்னும் விடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் அகற்றப்பட்டன

இந்த காணிகள் கடற்கரை பக்கமாகவும்,  ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது  அமைத்த ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக உள்ள காணியே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது. கடற்படை தமது முன்னரங்க நிலைகளை பின்னகர்த்தி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. கடற்படை பாவித்த வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன. மேலும் காணிகள் இப்பிலிப்பிலி மரங்கள் பற்றைகளால் சூழ்ந்துள்ளன. 

இங்கு  கிருஷ்ணன் கோயிலிலும் மேலும் சிலரது காணிகள் உள்ளன. இதனையும் விடுவித்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


No comments