இந்திய விசா அலுவலகங்கள் திறப்பு!கணணிகளது திருட்டையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ளஇந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசா மற்றும் பிற சேவைகளுக்கான விசா விண்ணப்ப மையம் நாளை முதல் வழமையாக இயங்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 15ஆம் திகதியன்று, இரவு எழுந்த பாதுகாப்பு சிக்கல் காரணமாக, இந்திய விசா விண்ணப்ப மையம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments