பிரதமருக்கு சுதந்திர தின நினைவு நாணயம் வழங்கப்பட்டது


இலங்கையின் 75வது சுதந்திர விழாவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் வைத்து கையளித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1000 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நினைவு நாணயம் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 71வது நினைவு நாணயம் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

No comments