பேரணியில் கலந்து கொண்ட வேலன் சுவாமிக்கு அழைப்பாணை!


 "வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி " பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமானது. 

குறித்த பேரணியில் கலந்து கொண்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சிவகுரு ஆதீனத்தில் வைத்து வேலன் சுவாமிகளிடம் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி  அழைப்பாணையை வழங்கியுள்ளார். 

அதேவேளை குறித்த அழைப்பாணையில்,  சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக , சட்டவிரோத பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

No comments