13ஐ எதிர்த்து பிக்குகள் போராட்டம்


13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதன்கிழமை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்படடத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது , குழப்ப நிலை ஏற்பட்டது. 

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாசங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை கோட்டை, பெரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.

பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments