மதியாதோர் வீட்டு முற்றத்தில் ...யாழ்ப்பாண கலாச்சார மண்டப திறப்பு விழாவில் எவ்வித கூச்சமும் இன்றி , மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ ஆடையுடன் , மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் கலந்து கொண்டமை குறித்து உறுப்பினர்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. 

கலாச்சார மண்டபத்தினை மத்திய அரசு கையகப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் , நிகழ்வின் நன்றியுரையினை மாநகர முதல்வரே ஆற்றுவார் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் , பின்னர் நன்றியரையில் இருந்து மாநகர முதல்வரின் பெயர் நீக்கப்பட்டது. 

இந்நிலையில் மாநகர சபையை முற்றாக நிகழ்வில் புறக்கணிக்கும் செயற்பாடு காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இருந்த போதிலும் இன்றைய தினம் நிகழ்வில் மாநகர முதல்வர், உத்தியோகபூர்வ ஆடையுடன் கலந்து கொண்டு இருந்தார். 

அதேவேளை மாநகர சபையின் சக உறுப்பினர் சட்டத்தரணி மு. றெமிடியஸ் இன்றைய தினம் உயிரிழந்துள்ள நிலையில் சக மாநகர சபை உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மாநகர முதல்வர் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments