டெல்லி கடந்து தமிழ்நாட்டு வெள்ளையடிப்பு!

 


டெல்லியை வைத்து தென்னிலங்கை ஆட்சியாளர்களிற்கு வெள்ளையடித்த காலம் கடந்து தற்போது தமிழ்நாடு அல்லக்கை அரசியல்வாதிகள் சகிதம் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மன்றத்தை மீள ரணில் திறக்கவுள்ள நிலையில் அவரது ஆலோசகரும் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டவருமான ருவான் அண்ணாமலையை சந்தித்து மதியவிருந்து வழங்கியுள்ளார்.

தனது பதிவில் பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை (கே) இலங்கைக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அண்ணாமலை மற்றும்  ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் காலநிலை மாற்றம் தொடர்பான சந்திப்பொன்று இன்று (11) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.  அண்ணாமலை) இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தவும் செயல்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தினார். இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் .செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டார்.No comments