நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ்ஸும் வானும் விபத்து - 7 பேர் உயிரிழப்பு!


நுவரேலியா நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்ற பஸும் , வான் ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதன்போது , வீதியில் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த விபத்தில் வானில் பயணித்த ஆறு பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்

விபத்தில் சிக்கிய பஸ் சுமார் 50 அடி ஆழாமான பள்ளத்தில் விழுந்ததாகவும், அதன்போது, பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் 41 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments