கிளியில் வீட்டிற்குள் பிளவு!

 


தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிக்கட்சிகளை தமிழரசு கட்சி புறந்தள்ளி தேர்தலில் தனித்து பயணிக்கமுற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியும் இரண்டாக பிளவுண்டுள்ளது.

அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்குற்பட்ட கரைச்சி பிரதேச சபையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவு தரப்பு சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.

அதன்படி, தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபை பின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் இணைந்து தனித்து போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழரசு கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப்பங்கீடு விடயத்தில் கட்சிக்காக கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை புறம்தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்காமல் வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுகட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் மொத்தமாக கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனியாக தேர்தலை எதிர்கொள்வது கட்சியின் மாவட்ட தலைமையாகிய நாடாமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிர்கால அரசியலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது.

முன்னதாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில், கிளிநொச்சியில் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுவை, இலங்கை தமிழரசுக் கட்சி சிவஞானம் சிறீதரன் தலைமையில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments