யாழில் சஜித் தரப்பும் தனியே தன்னந்தனியே!நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்குரிய உள்ளூராட்சிக்கான தேர்தல் கட்டுப்பணத்தை இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினர் மதியம் இரண்டு மணியளவில் யாழ் மாவட்ட தேர்தல் நடத்தும் தெரிவத்தாட்சி அலுவலரிடம்  செலுத்தப்பட்டது. 

இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்,கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அமைப்பாளர் S.விஜியகாந் அவர்களும் யாழ் மாவட்ட அமைப்பாளர் மதன்ராஜ் அவர்களும் .ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் ஊடகப்பேச்சாளர் உமாச்சந்திர பிரகாஷ் அவர்களும் ஏனைய தொகுதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்

No comments