கேணல் கிட்டு:30ஆவது ஆண்டு நினைவு தினம்



கேணல் கிட்டு மற்றும் பத்து போராளிகள்; வங்கக் கடலில் வீரகாவியமான  30ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று:

இதனை நினைவு கூர்ந்து கல்வியிலாளர் அனந்தராஜ் பகிர்ந்துள்ள கருத்தில்:

 வங்கக் கடலின் ஊடாக "எம்.வி.அகத்" கப்பலில்  16.01.1993 அன்று வந்து கொண்டிரு;நத பொழுது இந்திய இலங்கைக் கூட்டுச் சதியினால் கப்பலுடன் சர்வதேச கடற்பரப்பில் எரிந்து தம்மைத் தாமே ஆகுதி யாக்கிய கேணல் கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து தாயக்ததை கோக்கிய மகிழ்ச்சியில் பயணித்த பொழுது  குட்டிசிறி,மலரவன்,ஜீவா,குணசீலன், நாயகன், ரொசான், அமுதன்,நல்லவன்,தூயவன் ஆகிய போராளிகள் வீரச் சாவடைந்தனர்.

 கேணல் கிட்டு போரியலில் எவ்வளவுக்கு நுட்பமான அறிவையும் தந்திரோபாயத்தையும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு தமிழ் இலக்கியத் துறையிலும்இ ஊடகத் துறையிலும் ஆற்றல் உ;ளளவராக இருந்தார். கிட்டுவின் வழிகாட்டலில் வெளியிட்பபட்ட “களத்தில்” என்ற பத்திரிகை தரமானதாகவும் போரியல் வராலற்றை மிக எளிமையாக மக்களுக்கு வழங்கும் ஒரு சிறந்த வாரப்பத்திரிகையாகவும் இருந்தது. 

அதேவேளை இந்திய இராணுவம் தமிழீழத்தில் மேற்கொண்ட பல மனிதப்படுகொலைகளையும், பாலியல் கொடூரங்களையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேசத்திற்கு  வெளிப்படுத்தும்வகையில், சிறிய கையேடுகளைத் தயாரித்து ஆயிரக்கணக்கில் வெளியிட்டு சர்வதேச ரீதியாகப் பரப்பி வந்தார். 

இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஒப்பரேசன் பவன்” என்ற இராணுவ நடவடிக்கைகளின் பொழுது. பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் அவலங்கள், சொத்து அழிப்புக்கள்.  பாலியல் கொடுமைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விவரணத்தை வர்ணப்படங்களுடன் “பவன் ஜேர்னல்” என்ற சிறிய கையேடுகளின் ஊடாக  ஆங்கிலமொழியில் தயாரித்து வெளியிட்டமை இந்திய அரசுக்குச் சர்வதேச ரீதியாகக் களங்கத்தை ஏற்படுத்தியதுடன், அதனது போலி ஜனநாயக முகத்திரையைக் கிழிக்கவும் உதவியது. 

இவற்றிற்கும் மேலாக இந்திய அரசு உலகில் எதிர்காலத்தில் எந்த வகிபாகத்தைக் கொண்டிருக்கப் போகின்றது என்பதைப் புலப்படுத்தும் வகையில்,இந்திய இராணுவத்தினரால் தமிழீழப பகுதிகளில் மேற்கெரள்ளப்பட்ட படுகொலைகளையும்,சொத்து அழிப்புக்களையும் வெளிப்படுத்தும் வகையில் 300 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை கொண்டதாக ஈழத் தமிழர்களினால், தாய் நாடு என்று போற்றி வணங்கப்பட்ட நம்பிக்கை வைத்த நாடே முதுகில் குத்துவதை அடிப் படையாகக் கொண்டதாக,“நீயுமா இந்தியா..?” (YOU TOO INDIA…..? )என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். இலங்கைத் தீவில்  இந்தியா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களில் இருந்து தப்பி;த்துக் கொள்ள முடியாது என்பதற்; கான சிறந்த ஆவணமாக இந்தநூல் அமைந்திருந்தது. 

 கிட்டுவின் தாயகம் தொடர்பான சிந்தனையும்?தமிழ் மக்களின் நலன்கள் மீதும் எவ்வளவுக்கு அக்கறை கொண்டிருந்தார் என்பதையும், நினைத்துப் பார்க்கும் பொழுது இன்னும் சிலகாலம் எங்களுடன் இருந்திருநதால் அவர் ஒரு பெரிய  வீரகாவியத்தையே உருவாக்கியிருப்பார்

இன்றைய அவரது நினைவு நாளில் அவர் இறுதியாக எனக்கு எழுதிய கடிதத்தில் உள்ள சமுக.பொருளாதார. தமிழ்ப் பண்பாட்டுச் சிந்தனை யை நினைத்து;ப பார்க்கின்றேன். கேணல் கிட்டு  ஜெனிவாவில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்படுவதற்குச் சில நாடகளின் முன்னர் இறுதியாக எனக்கு எழுதிய கடிதத்தை இன்றும் எடுத்து வாசித்த பொழுது கிட்டுவின் பரந்த சிந்தனையை எடுத்துக் காட்டியது.  

பரந்த சிந்தனையுடைய கிட்டுவின் கடந்த கால நினைவுகள் என்னுடைய நெஞ்சில் ஆழமான வலியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டு சிறுவனாக இருந்த பொழுது 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் அவரது அண்ணனுடன் வருகை தந்த பொழுது ஒவ்வென்றை யும் மிகவும் கூர்மையாக அவதானி;தத பொழுதும். வல்வெட்டி துறையின் பிரசித்தி பெற்ற ஒரு கல்வி நிறுவனமாக விளங்கிய “வல்வைக் கல்வி மன்றத்தில்” என்னுடைய மாணவனாக இருந்த பொழுதும், சதியினால் தனது ஒரு காலை இழந்த பின்னரும், இந்திய அரசின் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையாகி இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்த பொழுதும் அவரது அறிவின் முதிர்ச்சியின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கின்றேன.

நெஞ்சம் கனத்த நினைவுகளுடன் அவருக்கும்> அவருடன் பயணித்த ஏனைய பத்து வேங்கைகளுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்து கொள்கின்றோம்.



No comments