வவுனியாவில் தனியன் அட்டகாசம் ; தூக்கமின்றி அச்சத்துடன் இரவினை கழிக்கும் மக்கள்!


வவுனியா மாமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளிக்குளம், சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள்  ஊடுருவும் காட்டுயானைகள் வயல்கள், தென்னைகள்  மற்றும் வாழை மரங்களை துவம்சம் செய்து வருகின்றன. 

குறித்த பகுதிகளுக்குள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த யானைகள் பயன்தரும் மரங்கள் , வயல்களை அழித்துள்ளன. 

அதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாக  தனியன் காட்டுயானை ஒன்று  அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஊருக்குள் யானை நுழைந்ததை அறிந்து கொண்ட மக்கள் விழிப்படைந்ததுடன் அதனை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் மக்கள் நித்திரையின்றி அச்சத்துடன் விழித்திருக்கின்றனர்.

எனவே  காட்டு யானைகளை விரட்டுவதற்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




No comments