ஜனவரியில் வரி வருமானம் 158 பில்லியன், செலவு 367 பில்லியன்


ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவீனம் 367.8 பில்லியன்கள்.

குறித்த செலவீனமானது ஜனவரி 27 ஆம் திகதி வரையானது என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments