வேலன் சுவாமிகள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!


வேலன் சுவாமிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டம் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு காயங்களை ஏற்படுத்தியமை , சட்டவிரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த 18ஆம் திகதி வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments