யாழில். போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!


யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை சோதனையிட்ட போது , அவர்களிடமிருந்து 400 போதைமாத்திரைகள் (40 கார்ட்) மீட்கப்பட்டுள்ளன. 

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இருவரையும் அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

No comments