நாளை முதல் 42 ரயில் பயணங்கள் ரத்து!
நாளைய தினம் வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாளொன்றுக்கு 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் பிரதான பாதையில் 20 ரயில் பயணங்களும், புத்தளம் பாதையில் 04 பயணங்களும், களனிவெளி பாதையில் 02 ரயில் பயணங்களும், கடலோர ரயில் பாதையில் 16 ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments