யாழில் மாடுகளை திருடி வந்த குற்றத்தில் இளைஞன் கைது!


யாழ்ப்பாணம் இருபாலை பகுதிகளில் மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த சந்தேகத்தில் நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

இருபாலை பகுதியில் உள்ள வீடொன்றினுள் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் திருடப்பட்டு இருந்தன. அது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் திருடப்பட்ட மாடுகளை வேறு ஒரு நபருக்கு விற்க முயன்ற போது மாடுகளின் உரிமையாளரால் மாடுகள் அடையாளம் காணப்பட்டு , அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

அதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மாடுகளை திருடிய குற்றத்தில் இளைஞனை கைது செய்ததுடன் , மாடுகளையும் மீட்டுள்ளனர் . 

கோப்பாய் , இருபாலை , கல்வியங்காடு பகுதிகளில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவங்களுடன் சந்தேக நபருக்கு தொடர்புகள் இருப்பதாகவும் , அது தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments