ஜெய்சங்கர் - அலி சப்ரி இடையே விசேட பேச்சு


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு  இடம்பெற்றதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நாட்டிற்கான முதலீட்டு வரங்களை மேலும் வலுப்படுத்த தேவையான ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை  பிற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாலைதீவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இந்நாட்டுக்கு வந்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.

No comments