காணாமல் ஆக்கப்பட்டவர்கள்:வயிறு வளர்க்கும் தமிழ் சட்டத்தரணிகள்!காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்திற்கு புத்துயிர் ஊட்டட வயிறு வளர்க்கும் சட்டத்தரணிகளின் தமிழ் தரப்பொன்று களமிறங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல் போனாருக்கான அலுவலகம், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 244 பேருக்கு விசாரணைக்கான அழைப்பையும் விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் விசாரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்த 125 பேர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 128 நாட்களை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் பங்கேற்றவர்களில், 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments