தேர்தல் தயாரிப்பு:கிராமசேவையாளர்களிற்கு இடமாற்றம்!இலங்கையில் கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மாவட்ட மற்றும் அமைச்சுக்களின் மேல்முறையீட்டு வாரியங்களில் இடமாற்றம் செய்யப்படாததற்கு சிறப்புக் காரணங்களைக் கொண்ட அலுவலர்களைத் தவிர, 5 வருட சேவையை பூர்த்தி செய்த ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்வது கட்டாயம் என்றும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments