அடுத்து கப்பல் சேவையாம்!

 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.


கொரோனா தொற்றுக் காரணமான பயணத்தடைகளால் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நேற்றுமுதல் மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தின் மூலம் வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.


No comments