டிக் டொக்கால் வந்த வினை


யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில்  டிக் டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர் ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை  இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.

இரண்டு நண்பர்கள் இணைந்து உந்துருளியில் டிக் டொக் எடுக்க முனைந்த போது உந்துருளியுடன்  ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை உயிருடன்  மீட்டெடுத்ததுடன், உந்துருளியையும்  மீட்டுக் கரைசேர்த்தனர்

No comments