செல்வத்திற்கும் இந்தியாவே வேண்டுமாம்!இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, செல்வம் அடைக்கலநாதனும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்கினேஸ்வரன் இந்திய மத்தியஸ்தத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் தற்போது செல்வம் அடைக்கலநாதனும் வலியுறுத்தியுள்ளார்.

எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் இராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்து நிலங்கள் அபகரிக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு அவசரப்பட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை என்பது அனைவரையும் ஒன்று திரட்டுகின்ற அல்லது ஒற்றுமை படுத்துகின்ற செயற்பாடாக அமைய வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 


No comments