டக்ளஸிற்கு வெளிச்சம் வந்தது!ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி தலைமை அலுவலகமாக இயங்கும் சிறீதர்; திரையரங்கிற்கு 40 நாள்களின் பின்னர்; மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இயங்கிய காலத்தில் அமைச்சராக செயல்பட்ட பணிகள் கருதி மின்சாரக் கட்டணத்தை மட்டும் செலுத்தவும் வட்டிப் பணத்தை இரத்துச் செய்யவும் அமைச்சு மட்டத்தில் பேசப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் செலுத்த வேண்டிய தொகையில் முதல் கட்டமாக 25 லட்சம் ரூபா நேற்று செலுத்தப்பட்டதன் அடிப்படையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறீதர் திரையரங்கின் மின்சாரக் கட்டணம்  1998ஆம் ஆண்டு முதல்  செலுத்தப்படவில்லை என்பதனால் மின் இணைப்பு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி  துண்டிக்கப்பட்டது.

ஈ.பி.டி.பி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது அலுவலகமாக தொடர்ந்து பயன்படுத்திவரும் சிறீதர் திரையரங்கிற்கான மின் இணைப்புக்கான  கொடுப்பனவுகள் 1998ஆம் ஆண்டு ஒகடோபர் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம. வரையில் செலுத்தப்படாது நிலுவையில் காணப்பட்டது.


இவ்வாறு செலுத்தப்படவேண்டிய தொகைக்கான நிலுவைப் பணம்  செலுத்தப்படாமையினால் மின் துண்டிப்புத் தொடர்பில்  இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

அவ்வாறு செலுத்தாத 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சத்த்திற்கும்  8 ஆண்டுகால வட்டிப் பணத்துடன் ஒரு கோடி ரூபாவினை தாண்டியதாக மின்சாரசபையால் கணக்கிடப்பட்டிருந்தது.


எனினும் அமைச்சு மட்டத்தில் பேசப்பட்டு செலுத்த வேண்டிய தொகையில் முதல் கட்டமாக 25 லட்சம. ரூபா நேற்று செலுத்தப்பட்டதன் அடிப்படையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


No comments