152 பேர் மீண்டும் இலங்கைக்கு!

 


கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் சம்மதம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உதவியுள்ளது.

முன்னதாக இலங்கை திரும்ப மறுத்திருந்த இருவர் தற்கொலைக்கு முயன்றிருந்தனர்.அவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

உயிழந்தவரது உடலம் அண்மையிலேயே சாவகச்சேரியிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments