மாற்றுக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது!மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்  விடுதலைப் புலிகள் அமைப்பின்  மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குூர் அர்ப்பணி நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்எங்களைப் பொறுத்தவரை தேசம் சார்ந்து தேசியத்தோடு  பயணித்த போராட்ட அமைப்புகளின் போராளிகள் அதாவது  விடுதலைக்காக பிற்பட்ட காலங்களிலே சில போராட்ட அமைப்புக்கள் எமது போராட்ட அமைப்போடு ஒரே கொள்கையில்  இணைந்து பயணித்தவர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

ஆனால் மாற்று சிந்தனையோடு பயணித்தவர்கள் யாரும் இந்த எமது அமைப்பில் இணைத்து பயணிக்கப் போவதில்லை நாங்கள் சிந்தித்து செயல்படுகின்ற விடயங்களை தொடர்ந்து பயணிக்காமல் முடியாமல் போய்விடும் எனவே மாற்று சிந்தனையுடையவர்களை இதில் உள்ளடக்க முடியாது என்பது எமது நிலைப்பாடாகும் என்றார்.

No comments