உதயநிதிக்கு சரி:நாமலுக்கோ இல்லை!தமிழ் நாட்டில் ஸ்ராலின் தனது மகனிற்கு அமைச்சர் பதவி வழங்கவுள்ள நிலையில் இலங்கையில் நாமல் ராஜபக்சவோ அமைச்சு பதவி வேண்டமென தெரிவித்துள்ளார். 

தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு  அமைச்சுப் பதவிகளையும் பெறப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெறபோவதில்லை என இப்போதல்ல இதற்கு முன்னரே நான் தீர்மானித்திருந்தேன். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகிச் சென்று ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதே நான் இது தொடர்பில் கூறியிருந்தேன் என்றார்.

எவ்வாறாயினும் அமைச்சரவைத் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

No comments