நிஷாந்த உலுகெதென்ன:யாரிந்த கொலையாளி!



போர்குற்றவாளி  நிஷாந்த உலுகெதென்ன அவர்கள் ஓய்வு பெறும் நிலையில்  ரணில் விக்கிரமசிங்கா அவர்களால்  அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கின்றார் 

2006-2009 காலப்பகுதியில் கடற்படை அதிகாரிகளால் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்ட தமிழர்கள்   பலரை  தடுத்து வைத்து இருந்த  திருகோணமலை கடற்படை தளத்தின் ‘Gun Site’ என்றழைக்கப்பட்ட இரகசிய சித்தரவதை தளத்தின்  மேற்பார்வை அதிகாரியாக நிஷாந்த உலுகெதென்ன பணியாற்றி இருந்தார் 

International Truth and Justice Project (ITJP) அமைப்பினால் 2019 ஆம் ஆண்டு The Sri Lankan Navy: A Collective Blind Eye என்கிற தலைப்பில் வெளியிட்ட ஆவணத்தில் ‘Gun Site’ என்றழைக்கப்பட்ட இரகசிய சித்தரவதை தளத்தோடு தொடர்புடைய அதிகாரிகளில் ஒருவராக அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன  இனம் காணப்பட்டு இருக்கின்றார் 

ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழு (Working Group on Enforced or Involuntary Disappearances ) திருகோணமலை ‘Gun Site’ சித்தரவதை தளத்தின் நிலத்தடி அறைகளில் (systematic torture ) திட்டமிடப்பட்ட சித்திரவதைகள் இடம்பெற்றதை உறுதிப்படுத்தி இருக்கின்றது 

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட  அவர்களின் உதவியுடன் கடற்படை அதிகாரிகளால் கடத்தப்பட்ட கொழும்பை சேர்ந்த 11 தமிழ் மாணவர்களும் மேற்படி திருகோணமலை கடற்படை தளத்தின்   ‘Gun Site’'  வதை முகாமில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார்கள் 

2009 மே 21 ம் திகதி கடத்தப்பட்ட மாணவர்களில் ஒருவரான ராஜீவ் நாகநாதன் கொல்லப்படுவதற்கு முன்னர் தனது தாய் சரோஜினி நாகநாதன் அவர்களோடு மேற்படி ‘Gun Site’ தடுப்பு முகாமில் இருந்தவாறு தான் தொலைபேசி வழியே பேசி இருந்தார்.

இது தவிர, நிஷாந்த உலுகெதென்ன  போரின் இறுதி வாரங்களில் "No Fire Zones" ஐ இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படைக்கு தேவையான ஏவுகணைகளை அறிமுகப்படுத்திய சூத்திரதாரிகளில் ஒருவராகவும்  கருதப்படுகின்றார் 

கோத்தபாயா ராஜபக்சே  நெருங்கிய சகாவாக கருதப்படும் நிஷாந்த உலுகெதென்ன  கடற்படை தளபதியாக கோத்தபாயா ராஜபக்சே அவர்களால் 2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு இருந்தார் 

இந்தநிலையில் தற்போது திரு ரணில் விக்ரமசிங்கே  நிஷாந்த உலுகெதென்ன அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி இருக்கின்றார் 

கடந்த வாரம் தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் வரும் பெப்ருவரி 4 ஆம் திகதிக்கு முன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து இருந்த  ரணில் விக்ரமசிங்கே அவர்கள்  கடத்தப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கொடூரமான சித்தரவதை தளத்தின் பொறுப்பதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கி இருக்கின்றார்

No comments