காரைநகர் வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பு!காரைநகர் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள வர்த்தக நிலைய  வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் 2023 ம் ஆண்டிற்கான வியாபார அனுமதி மற்றும் உணவுப் பாதுகாப்பு சம்மந்தமாக  கலந்துரையாடப்பட்டதோடு வியாபார நிலையங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது,

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் காரைநகர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சபையின் செயலாளர் வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments