காரைநகர் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு!யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை கடற்படை முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவிடுவதற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனையடுத்து அங்கு வந்த நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு அளவிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி ஒப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணியின் உரிமையாளர்கள், சமூகமட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.No comments