அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள் ; இறுதித்தீர்மானம் வியாழன்


அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு 10 உறுப்பினர்கள் உள்ளடங்கும் நிலையில் அதற்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கவுள்ளனர்.

தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

பொருத்தமான விண்ணப்பங்கள் மற்றும் பதவிக்கு தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பற்றிய ஆய்வுக்குப் பின்னர் அதற்கு மூன்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் பின்னர் ஜனாதிபதி அவர்களை அரசியலமைப்பு சபைக்கு நியமிப்பார்.

No comments