யாழில். கணவனின் கழுத்து கத்தி வைத்து மனைவியை வன்புணர முயற்சி ; ஒருவர் கைது - இருவர் தலைமறைவு!


யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை வன்புணர முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடி வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் , இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த மூவர் , வீட்டில் இருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி , மனைவியை வன்புணர முயற்சித்துள்ளனர். 

அதன் போது , அவர்கள் அபய குரல் எழுப்பவே , வீட்டினுள் நுழைந்த மூவரும் , அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் , கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , தலைமறைவாகியுள்ள இருவரையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments